சர்வதேச முக்கிய நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரியாக மற்றும் ஒரு இந்தியர்
டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் (Parag Agrawal) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜேக் டோர்சி (Jack Dorsey) நேற்று தனது பதவியில் இருந்து விலகியதை அடுத்தே இந்தியரான பராக் அகர்வால் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பராக் அகர்வால் மும்பையில் கல்வி கற்றார்
அத்துடன் 10 ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
டுவிட்டரில் ஆயிரத்திற்கும் குறைவான பணியாளர்கள் இருந்த போது பணியில் சேர்ந்த பராக் கடின உழைப்பால் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.
கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக பொறுப்பு வகிக்கும் இந்தியர்களான சுந்தர் பிச்சை (கூகுள்) மற்றும் சத்யா நாதெள்ளா ஆகியோரை தொடர்ந்து பராக் அகர்வாலும் முக்கிய நிறுவனமான டுவிட்டரின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்துள்ளார்.


டபுள் எலிமினேஷன்.. பிக் பாஸ் 9ல் இருந்து சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் Cineulagam
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam