நாடு திரும்பிய கோட்டாபய பலத்த பாதுகாப்புடன் தங்கியிருக்கும் இடம்!(Video)
மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நாட்டில் இருந்து தப்பிச்சென்ற பின்னர் பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது மனைவி் அயோமா ராஜபக்ச ஆகியோர் மீண்டும் நாடு திரும்பினர்.
கோட்டாபய ராஜபக்ச நேற்று முன்தினம் இரவு, 11.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அதன் பின்னர் அவர் அங்கிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு - 7 பௌத்தாலோக மாவத்தைக்கு முகப்பாக அமைந்துள்ள மலலசேகர மாவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவரது பாதுகாப்புக்கு அதிரடிப்படையினரை உள்ளடக்கிய சிறப்பு பிரிவு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,