இலங்கையில் இலட்சக்கணக்கானோருக்கு ஏற்படவுள்ள நிலைமை குறித்து எச்சரிக்கை (video)
நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இலங்கையில் இலட்சக்கணக்கானோர் தொழில்களை இழக்கும் நிலைமை ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை வங்கிகளும் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாகவும், இதனை பாதுகாப்பதற்கு தேவையான வேலைத்திட்டங்களை தாமதிக்காது முன்னெடுக்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், எமது வங்கிகளில் இருப்புகள் இருக்குமாக இருந்தால் உண்மையில் அவற்றின் தற்போதைய பெறுமதி 50 வீதமானதாகவே இருக்கும்.
ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி இருக்குமாக இருந்தால் அவற்றின் பெறுமதியும் 50 வீதமே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri