பலப்பிரயோகம் செய்ய வேண்டி ஏற்படும்! பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை (Video)
நாடளாவிய ரீதியில் நாளை மக்கள் போராட்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் அன்றைய தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸார் பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை மதிப்பதாகவும் அதனால் குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் எந்த தடைகளையும் ஏற்படுத்தப் போவதில்லை எனவும் குறிப்பிட்ட அவர், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லை மீறி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் அளவிற்கு சென்றால் பலப்பிரயோகம் செய்ய வேண்டி ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம் தொகுப்பு,

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 4 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
