இன்னும் ஒரு சில நாட்களில் சுற்றிவளைக்கப்படவுள்ள கொழும்பு (Video)
நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் கோரி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
இதில் எவ்வித கட்சி பேதமுமின்றி ராஜபக்சர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 15ஆம் திகதி பாரிய மக்கள் பேரணியுடன் கொழும்பை சுற்றிவளைக்கவுள்ளோம்.
இதில் 69 இலட்சம் மக்களையும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிடுமாறு அழைப்பு விடுக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,