கைகள் கட்டப்பட்டு பயணப்பைக்குள் இருந்த சடலம்: தீவிரமடையும் விசாரணை
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் குப்பை சேகரிக்கப்பட்டிருந்த இடத்தில் பயணப்பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த இடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய அவ்விடத்திற்கு வருகை தந்து பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது, சந்தேகத்திற்கிடமான பயணப்பையொன்று இருந்துள்ள நிலையில் அதில் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது.
சடலத்தின் கைககள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளதுடன், உயிரிழந்த பெண் 35 தொடக்கம் 40 வயதுடையவராக இருக்கலாம் எனவும், குறித்த பெண் சிவப்பு நிற ஆடை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
