“இலங்கையில் நீண்டகால வீசா அனுமதி” - கால எல்லை 5 வருடங்களா?
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வீசா அனுமதிக் காலத்தை 5 வருடங்கள் வரை அதிகரிப்பது உள்ளிட்ட விடயங்களை இலக்காக கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு (திருத்த) சட்டமூலம் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு சார் ஆலோசனை குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
சட்டமூலத்திற்கு அமைய 1984ஆம் ஆண்டு 20ஆம் இலக்க குடிவரவு குடியல்வு சட்டத்தின் 14ஆவது சரத்து திருத்தத்திற்கு உள்ளாக இருப்பதுடன், தற்போது வீசா அனுமதியை வழங்கக்கூடிய கால எல்லையான 2 வருடங்களை 5 வருடங்கள் வரை அதிகரிப்பதே இத்திருத்தத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஜெனரல் சரத் ரூபசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நீண்டகால வீசா அனுமதியை வழங்குவதன் ஊடாக வெளிநாட்டு முதலீட்டு வணிகங்களுக்காக முதலீடு செய்ய மிகவும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது உள்ளிட்ட சமூக பொருளாதார நலன்கள் பல கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam