தொற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனியும் பரிசளிப்பு விழாவும்
பருத்தித்துறை, மருதங்கேணி, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளின் வழிகாட்டலுடனான தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு நடை பயணியும், பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் யோ.திவாகர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நடைபவனி
நெல்லியடி மாலிசந்தி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து நடைபவனியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மண்டபம் வரை சென்று அங்கு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றதனை தொடர்ந்து விருந்தினர்கள் கருத்துரைகளை நிகழ்த்தினர்.
தொடர்ந்து தொற்றுநோய் தொடர்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்காக பரிசில்களை நிகழ்வின் பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் வழங்கி கௌரவித்தனர்.








