இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள பால்மாவின் விலை
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்கப் பரிசீலித்து வருவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஒரு கிலோ பால்மாவின் விலையை 300 ரூபாவாலும் 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 120 ரூபாவாலும் அதிகரிக்கப்படுமெனச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளமையால் உள்ளூர் சந்தையில் பால் மாவின் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே இதுதொடர்பில் நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan