பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் அதிரடி: ஒரே நாளில் கைதான திருடர்கள்
பளை - இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் கைதான இருவரையும் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஹாட்வயார் ஒன்றினுள் நேற்று முன்தினம் இரு நபர்கள் புகுந்து இரண்டு லட்சத்து எண்பதாயிரத்து நூற்று ஐம்பது ரூபா பெறுமதியான வீட்டு மின் பாவனை பொருத்து பொருட்களைத் திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பாகப் பளை பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அதிக கவனம் எடுத்து பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதனடிப்படையில் வவுனியா சாந்தசோலை பகுதியில் ஒருவரும் கிளிநொச்சியில் ஒருவருமாக இருவர் 16ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருடிச்சென்ற பொருட்களும் மீட்கப்பட்டதுடன் அவர்கள் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி இவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
