கிழக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாலித ரங்கே பண்டார
ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார கிழக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சிவலிங்கம் சுதர்சனன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சின் செயற்பாட்டாளர்கள் சந்திப்பு கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி மட்டக்களப்பு பொது நூலக கேட்ப்போர் கூட மண்டபத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காகவே பாலித ரங்கே பண்டார வருகை தர உள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் முன்னாயத்தம்
மேலும், இதுபோன்று அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் கட்சியின் செயலாளர்கேற்கும் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் தேர்தல்களை மையப்படுத்தி அதற்குரிய முன்னாயத்தமாக கட்சியின் அமைப்பாளர்கள், உறுப்பினர்களையும், சந்தித்து ஊக்கப்படுத்தும் செயற்பாடுகள் செயலாளரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பாளர்கள், உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பதவி நிலை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 1 மணி நேரம் முன்

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
