விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் தலைமை பதவியிலிருந்து இலங்கை செல்வந்தர் விலகல்!
விர்ஜின் கேலக்டிக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை பதவியிலிருந்து விலகுவதற்கு இலங்கையின் செல்வந்தரான சமத் பலிஹபிட்டிய தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலிஹபிட்டிய ஏன் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார் என்பது குறித்து தெளிவான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், அவர் ஏனைய பொது நிறுவனங்களின் நிர்வாகக் கடமைகளில் கவனம் செலுத்துவார்" என்று நிறுவனம் கூறியுள்ளது.
விர்ஜின் கேலக்டிக் பங்குகள் 2019ம் ஆண்டு அறிமுகமானதில் இருந்து நேற்று 81 சதவீதம் குறைந்து 9 டொலராக குறைந்துள்ளதிருந்து எனவும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக இவான் லோவலின் செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு முதல் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் தலைவராக சமத் பலிஹபிட்டிய செயற்பட்டு வந்தார்.
1976ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த சமத் தனது 5வது வயதில் கனடாவுக்குச் சென்றிருந்தார்.
அவரது தந்தை கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பணிபுரிந்தார், அவரது பதவிக்காலத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் கனடாவில் குடியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
