இலங்கை ஐ.நா அலுவலகத்திற்கு முன்னால் குவிந்த பொது மக்கள்
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்தக் கோரி, பலஸ்தீனத்தை ஆதரிக்கும் இலங்கை அரசியல் கட்சிகளின் கூட்டணி, ஐ.நா. அலுவலகம் முன் இன்று(14) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் சியோனிச வாதத்தால் குழந்தைகள் இறந்து வருவதாகவும், பசியால் வாடும் மக்களை குறித்த சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாகவும், அரசாங்கம் தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமெழுப்பியுள்ளனர்.
கையளிக்கப்பட்ட மனு
ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை ஐ.நா. தலைமையகத்திற்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் விஜேசூரிய இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




