36 ஆண்டுகளாக காணிகளை இழந்த வலி.வடக்கு மக்கள்: 5வது வாரமாக தொடரும் போராட்டம்
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் பலாலி சந்தியில் இன்று (19) ஐந்தாவது வாரமாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 36 ஆண்டுகளாக தமது சொந்த காணிகளை இழந்து வாழ்ந்து வரும் மக்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது நிலங்களை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்த வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தியுங்கள்! கூட்டு தமிழ் பேசும் கட்சிகளிடம் கோரிக்கை
தொடரும் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களது காணிகளில் தற்போது இராணுவம் விவசாய நடவடிக்கைகளையும் வர்த்தக நிலையங்களையும் நடத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டினர்.

அதேவேளை, உண்மையான உரிமையாளர்களான தாங்கள் நீண்ட காலமாக வீடுகளும் காணிகளும் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
எனவே, தங்களது காணிகளையும் வீடுகளையும் உடனடியாக விடுவித்து மீளக் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.





ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan