பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (05) நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
கடந்த 2019ம் ஆண்டு ஒக்டோபர் 17ம் திகதி இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
எனினும் பின்னர் ஏற்பட்ட கோவிட் வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு தொடக்கம் பலாலி விமான நிலையம் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 12ம் திகதி இந்திய விமானமொன்றின் வருகையுடன் பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் இயங்க தொடங்கவுள்ளது.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri
