காணி விவகாரம்! தேசிய மக்கள் சக்தி தரப்பு மேற்கொண்ட முயற்சியை தடுத்து நிறுத்திய கஜேந்திரகுமார் எம்.பி
பளையிலுள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான சுமார் 900 ஏக்கர்காணி ஜனதா மக்கள் பெருந்தோட்ட சபை என்ற அமைப்பினால் சட்டவிரோதமான முறையில் சிலோபவுண்டேசன் என்ற நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வழங்கியதை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தடுத்து நிறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி பளை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
இதன்போது, இந்தக் காணியை அவர்களுக்கு சட்டபூர்வமாக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி தரப்பு மேற்கொண்ட முயற்சியை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அம்பலப்படுத்தி தடுத்து நிறுத்தினார்.
காணிகள் விபரம்
தனியார் காணிகளில் இருந்து படையினர் வெளியேற வேண்டுமென மக்கள் 16 வருடங்களாக கோரி வருகின்றனர்.
இந்தநிலையில் பளைப்பகுதியில் படையினர் வசமுள்ள இரண்டு தனியார் காணிகளை குறிப்பிட்டு அந்தக் காணிகளது உரிமையாளர்கள் மட்டுமே தமது காணிகளை விடுவிக்க கோரியுள்ளார்கள் என்றும் ஆகவே அக்காணிகளை விடுவிக்க வேண்டுமா என ஒருங்கிணைப்புக்குழுவிடம் அனுமதிகோரும் தலைகீழ் கேள்வியும் நடைமுறையையும் முன்வைத்தார்.
அதற்கு ஆட்சேபனை தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பளையிலுள்ள தனியார் காணிகள் விபரம் பிரதேச செயலகத்திடம் உள்ளது.
தீர்மானம்
அந்த விபரங்களை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு ஊடக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவுக்குச் சமர்ப்பித்து அவை அனைத்திலிருந்தும் இராணுவம் வெளியேறவேண்டுமென்ற தீர்மானம் மேற்கொள்ளப்படல் வேண்டுமென ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.
இந்தக் கருத்தை பிரதேசசபை தவிசாளர் சுரேன் ஆமோதித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் பிரதிநிதி வீராவும் ஆமோதித்ததுடன் சபையும் ஆமோதித்தது.









தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
