பேருந்து மற்றும் லொறி மோதி விபத்து - 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி
தனியார் பேருந்தும் லொறியொன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து கரவனெல்ல மற்றும் கித்துல்கலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கித்துல்கலையில் இருந்து அவிசாவளை கைத்தொழில் நிறுவனமொன்றிற்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற போதே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று காலை (15) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
எட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணை
குறித்த தனியார் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்திசையில் வந்த லொறி,வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
லொறியின் சாரதி நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் , அவர் எட்டியாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
