பளையில் பேருந்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்றைய (05) பேருந்தில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழிலிருந்து சுற்றுலாவுக்காக திருகோணமலை சென்று நேற்றைய தினம் திரும்பி வந்துகொண்டிருந்த வேளை பேருந்தில் இருந்த நபர் திடீரென தவறி பளை இத்தாவில் பகுதியில் ஏ9வீதியில் விழுந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் யாழ். போதனா வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொடிகாமம் மீசாலை பகுதியை சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் (47)வயதையுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 10 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri