கெஹெல்பத்தர பத்மேயுடன் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பு! வெளியான தகவல்
நுவரெலியா பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற் க்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே நிதியுதவி அளித்ததாகக் கூறப்படும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக வெளிநாட்டினர் அழைத்து வரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று (04) காலை புதிய கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையக் கட்டடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வெளிகொண்டு வந்த தகவல்களின்படி, ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை இயக்குவதில் இரண்டு பாகிஸ்தானியர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
நுவரெலியாவில் உள்ள கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிக்கும் தொழிற்சாலையில் கெஹெல்பத்தர பத்மே' முதலீடு செய்துள்ளதாக கண்டுபிடித்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விசாரணையின் போது, சட்டவிரோத நடவடிக்கையில் ரூ.4 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்ததாக பத்மே ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
முழுமையான விசாரணை
போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக நுவரெலியாவில் உள்ள ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், இதற்காக 2,000 கிலோகிராம்களுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
சமீபத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் அரசியல்வாதிகளுக்கும் குற்றவியல் வலையமைப்புகளுக்கும் இடையிலான நீண்டகால தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முழுமையான விசாரணை தேவைப்படும் என்று அமைச்சர் கூறினார்.





காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 19 மணி நேரம் முன்

பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்: ஒரு வைரல் செய்தி News Lankasri
