இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர் சுட்டுக்கொலை
ஜம்மு- காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரரை இந்திய இராணுவத்தினர் சுட்டு கொன்றுள்ளனர்.
ஹொட்லைன் மூலம் பாகிஸ்தான் இராணுவத்தினரை தொடர்புகொண்டு சுட்டுக்கொல்லப்பட்ட வீரரின் உடலை பெற்றுக்கொள்ளும் படி இந்திய இராணுவம் கூறியுள்ளது.
இது குறித்து இராணுவ காலாட்படை பிரிவு மேஜர் ஜெனரல் பென்தர்கர் தெரிவித்துள்ளதாவது,
காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிரன் செக்டார் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர், ஊடுருவ முயன்றுள்ளார்.
இந்திய பாதுகாப்பு படையினர் அந்த வீரர் மீது நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த வீரர் முகமது ஷபீர் மாலிக் எனவும், அவரிடமிருந்து ஏகே ரக துப்பாக்கி, வெடிமருந்து, கையெறி குண்டுகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam