ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி வழங்கப்படும்! எச்சரித்த பாகிஸ்தான்
ஒரே இரவில் நடந்த மோதல்களில் 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றதாக, ஆப்கானிஸ்தான் படையினர் கூறியதை அடுத்து, "வலுவான மற்றும் பயனுள்ள பதிலடி" அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் எல்லையில் "ஆத்திரமூட்டல் செயற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் ஆயுதப் படை
முன்னதாக, தாலிபான் பேச்சாளர் ஜபிஹுல்லா முஜாஹித், விடுத்த அறிவிப்பில், ஆப்கானிஸ்தான் படைகள் "பழிவாங்கும் மற்றும் வெற்றிகரமான நடவடிக்கைகளை" மேற்கொண்டதாகவும், அதில் 25 பாகிஸ்தான் இராணுவ நிலைகளைக் கைப்பற்றியதாகவும், 58 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் கூறியிருந்தார்.
எனினும் இந்த தகவல்களை பாகிஸ்தான் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையிலேயே, தாக்குதல்களுக்கு "வலுவான மற்றும் தொழில்முறை பதில்" வழங்கியமை தொடர்பில் ஷெரீப் பாகிஸ்தானின் ஆயுதப் படைகளைப் பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
