ஈரானிய சபாநாயகரைச் சந்தித்த பாகிஸ்தான் இராணுவ தளபதி
ஈரானின் முதன்மை பேச்சுவார்த்தையாளரும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் காலிபாஃப், பாகிஸ்தான் இராணுவ தளபதி ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீரை தலைநகர் தெஹ்ரானில் சந்தித்துப் பேசியுள்ளார்.
பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலைத் தணிப்பது மற்றும் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் இந்த உயர் மட்டச் சந்திப்பில் விரிவாக ஆலோசித்துள்ளனர்.
ஈரான் விஜயம்
இந்தச் சந்திப்பின் போது பேசிய சபாநாயகர் காலிபாஃப், ஈரானின் இறையாண்மை மற்றும் தேசிய நலன்கள் சார்ந்த விஷயங்களில் தங்களது நாடு எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

இராஜதந்திர ரீதியாகவும், போர்க்களத்திலும் நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க ஈரான் உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் இராணுவ தளபதியின் இந்த ஈரான் விஜயம் சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam