கடவுளின் பெயரால் பதிலடி கொடுக்கப்படும்! பாகிஸ்தானால் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று இந்தியாவிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் முறுகல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
பாகிஸ்தான் இந்தியா
“பாகிஸ்தான் மீது இந்தியா படையெடுக்க வாய்ப்புள்ளதால், வான்வழி, கடல்வழி அல்லது தரைவழியாக இந்தியாவின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள இராணுவத்தை தமது நாடு தயார் நிலையில் வைத்துள்ளது.
குறிப்பாக பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் எந்தவொரு சூழ்நிலையும் "கடவுளின் பெயரால்" தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்” என பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் புரூஸ், இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்திய நாடுகள் என்றும், வளர்ந்து வரும் இராணுவ சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் தங்கள் வெளியுறவு அமைச்சர்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
தாக்குதலுக்கு பதிலடி
ஆனால், காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானைத் தாக்க இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.
இதன்படி தாக்குதல்களை எப்போது, எங்கு நடத்துவது என்பதை முடிவு செய்ய நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
