இரண்டாவது இன்னிங்ஸில் நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தானிய அணி!
சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நிறைவுப்பெற்றது.
இன்றைய ஆட்ட முடிவின்போது தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தானிய அணி, 1 விக்கட்டை இழந்து 213 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக அந்த அணி தமது முதலாம் இன்னிங்ஸில் 194 ஓட்;டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தநிலையில் பொலோ ஒன் முறையின்கீழ் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
102 ஓட்டங்கள்
இதில் சான் மசூத் 102 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்தார்.
முன்னதாக தென்னாபிரிக்க அணி, தமது முதல் இன்னிங்ஸில் 615 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் ரையன் ரிக்கல்டன் 259 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். டெம்பா பவுமா 106 ஓட்டங்களையும், கெய்ல் விரைய்ன் 100 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |