விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் புலனாய்வு சேவையுடன் இணைந்த இலங்கையர்கள் (Video)
இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின் குழு ஒன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் தொடர்பில் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாகவே இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின் குழு ஒன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்த 9 பேர் தொடர்பிலும், நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களில் இருந்தும் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளி்ன் தொகுப்பு,