பொருளாதார நெருக்கடியை தீர்க்க புதிய திட்டம் வகுக்கும் பாகிஸ்தான்
பொருளாதார நெருக்கடியை தீர்க்க பாகிஸ்தான்(Pakistan) நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் திணறி வருவதோடு, அங்கு பண வீக்கம் அதிகரித்ததால் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
இதன் காரணமாக பாகிஸ்தான் அரசு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் அதிக கடன்களை பெற்றுள்ளது.ஆனால் நெருக்கடியை சமாளிக்க போராடும் அந்நாட்டு அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

அதன்படி நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' (PIA) நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் சொந்த பாரிய நிறுவனமான PIA கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்தை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 11 மணி நேரம் முன்
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam