சவூதி அரேபியாவிடம் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற பாகிஸ்தான் கோரிக்கை
பண ஸ்திரமின்மை அந்நிய செலாவணி பற்றாக்குறையை உருவாக்கியுள்ள நிலையில், பாகிஸ்தானின் மத்திய வங்கியிடம் மீதமுள்ள கையிருப்பு இல்லாமல் போயுள்ளது.
இதனையடுத்து இலங்கையைப் போன்று அடிக்கடி பிரிட்ஜிங் ஃபைனான்ஸ் என்று கூறப்படும் தற்காலிக பாணியில் சவூதி அரேபியாவிடம் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பாகிஸ்தான் கோரியுள்ளது.
சவூதி தூதுவர் நவாப் பின் சையத் அல்-மல்கியுடன் நடைபெற்ற சந்திப்பின் போது நிதியமைச்சர் இஷாக் தார் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக பாகிஸ்தானின் ட்ரிப்யூன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
கடன் பொறுப்புகள்
சவுதி ஃபண்ட் ஃபார் டெவலப்மென்ட் அமைப்பு, ஏற்கனவே 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை, பாகிஸ்தானின் மத்திய வங்கிக்கு வழங்கியுள்ளது.
இதேவேளை பாகிஸ்தான் மத்திய வங்கியிடம் தற்போதைய மொத்த வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், 8.8 பில்லியன் உள்ள கடன் பொறுப்புகள் இருப்பதாகவும் செய்தித்தாள் கூறியுள்ளது.
இந்த நிலையில் பாக்கிஸ்தானின் மத்திய வங்கி, 5 முதல் 7 சதவிகித பணவீக்க இலக்கை
இலக்காகக் கொண்டு ஒரு நிலையான கொள்கை விகிதத்திற்கு பணத்தை அச்சிட
முயற்சிக்கிறது என்றும் பாகிஸ்தானிய செய்தித்தாள் தெரிவித்துள்ளது.



