இருதரப்பு ஏற்றுமதி வர்த்தகம்: தினேஸ் குணவர்தன - பாகிஸ்தான் தூதுவர் இடையே விசேட சந்திப்பு
இலங்கைக்கு வெங்காயம் மற்றும் சோளத்தை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பாகிஸ்தான் ஆராயும் என பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் உமர் பரூக் புர்கி தெரிவித்துள்ளார்.
தமது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் சந்தர்ப்பத்திலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் பிரதமர் வை நேற்று(18.12.2023) சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய முதலீடுகள்
சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குறிப்பாக பௌத்த யாத்ரீகர்கள் பாகிஸ்தானுக்கான பயணங்கள் குறித்து தூதுவர் இலங்கை பிரதமரிடம் விளக்கியுள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலும் ஏனைய சர்வதேச அரங்குகளிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் புதிய முதலீடுகளை தேடுமாறு பாகிஸ்தான் தொழில் முயற்சியாளர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |