2024இல் நடக்கப்போவது என்ன? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீர் தொடர்பில் இந்தியாவின் அறிவிப்பு!
காஸ்மீர் தொடர்பில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்ந்தும் முறுகல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், 2024-ம் ஆண்டுக்குள் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் சேரும் என்று இந்திய மத்திய அமைச்சர் ஒருவர் உறுதி அளித்துள்ளார்.
மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் பட்டீல், இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரால்தான் சில விடயங்களை சாதிக்க முடியும். குடியுரிமை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற துணிச்சலான முடிவுகளை பிரதமர் எடுத்துள்ளார்.
இந்தநிலையில் மோடியின் ஆட்சியின்கீழ் 2024-ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் மீண்டும் சேரும் என்று பட்டீல் குறிப்பிட்டார்.
1947ம் ஆண்டு இந்தியாவின் காஸ்மீர் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தாக இந்தியா குற்றம் சுமத்தி வருகிறது.
இந்தநிலையில் இந்திய கட்டுப்பாட்டு காஸ்மீரில் 40 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இதில் 95வீதமானோர் முஸ்லிம்கள், 4 வீதமானோர் இந்துக்களாவர். ஜம்முவில் 30 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
இதில் 66 இந்துக்களும் 30 வீத முஸ்லிம்களும் அடங்குவர். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள அசாட் காஸ்மீரில் 40 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இது 100 வீத சனத்தொகையாகும்.










மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam
