இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க எதிர்பார்க்கும் பாகிஸ்தான்
இந்தியாவில் (India) புதிய அரசாங்கம் அதிகார பூர்வமாக பதவியேற்கும் வரை பிரதமர் மோடியை வாழ்த்துவது பற்றி விவாதிப்பது முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் செயலாக இருக்கும் என்று பாகிஸ்தான் (Pakistan) வெளியுறவு அலுவலக பேச்சாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேர்தல் செயல்முறை குறித்து பாகிஸ்தானிடம் எந்தக் கருத்தும் இல்லை.
எனினும் புதிய அரசாங்கம் அதிகார பூர்வமாக பதவியேற்கவில்லை என்பதால், பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பது பற்றி பேசுவது உரிய காலத்துக்கு முன்னரான செயலாகும் என்று பேச்சாளர் மும்தாஜ் குறிப்பிட்டுள்ளார்.
நிலுவையில் உள்ள பிரச்சினைகள்
இதேவேளை இந்தியா உட்பட அதன் அண்டை நாடுகளுடன் நட்பு மற்றும் கூட்டுறவுகளை விரும்புவதாகவும், அனைத்து சர்ச்சைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக பாகிஸ்தானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஈடுபாட்டிற்காக பாகிஸ்தான் எப்போதும் எதிர்பார்க்கிறது.
மேலும், குறிப்பாக ஜம்மு மற்றும் காஸ்மீரின் முக்கிய தகராறு உட்பட அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகளையும் தீர்க்க ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஈடுபாட்டை நாங்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக பேச்சாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 21 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
