பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய ஏவுகணை! இந்தியாவை கடுமையாக விமர்சிக்கும் இம்ரான் கான் (photo)
பாகிஸ்தானிய பகுதியில் தவறுதலாக ஏவுகணை ஒன்றை ஏவியதாக கூறப்படும் விடயத்தில் இந்தியாவின் பதில் ஏற்புடையதாக இல்லை என பாக்கிஸ்தானி பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 9ஆம் திகதியன்று இடம்பெற்றது.
இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை லாகூரில் இருந்து 275 கி.மீ தொலைவில் உள்ள மியான் சன் பகுதியில் வீழ்ந்தது.
எனினும் இதில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதனை தவறுதாக இடம்பெற்ற சம்பவம் என்று இந்தியா கூறியபோதும், பாகிஸ்தான் தமது ராஜதந்திர அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில் மியான் சன்னுவில் இந்திய ஏவுகணை விழுந்தமையை அடுத்து பாக்கிஸ்தான் அதற்கு பதிலடி கொடுத்திருக்கலாம்,
ஆனால் தாம் நிதானத்தை கடைபிடித்ததாக இம்ரான் குறிப்பிட்டுள்ளார்.
ஏவுகணை ஏவப்பட்டமை குறித்து இந்தியா அளித்த எளிமையான விளக்கம் ஏற்புடையது அல்ல.
எனவே இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை துல்லியமாக விசாரிக்க ஒரு விசாரணை அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 13 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri