பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட குழு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
குறித்த தீர்ப்பானது இன்று(29.08.2023) இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இம்ரான் கானுக்கு எதிரான தண்டனைகளை இடைநிறுத்தி பிணை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றச்சாட்டு
2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிரதமராக இருந்தபோது அரச பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டில் கடந்த 5ஆம் திகதி இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் தண்டனையின் விளைவாக, அந்த நாட்டின் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தலில் போட்டியிட அவருக்கு ஐந்தாண்டுகளுக்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
