இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு எதிராக பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு
ஜம்முவில் உள்ள ஆர்.எஸ். புரா செக்டாரில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு எதிராக பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதல் இன்றையதினம்(10) நடைபெற்றுள்ளது.
போர் பதற்றம்
இந்த தாக்குதலில் 8 வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அருகில் உள்ள இராணுவ மருத்துவம முகாமுக்கு சிகிச்சைக்கான கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகின்றது.
துப்பாக்கிச்சூடு
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திவரும் நிலையில், இருநாட்டு எல்லையில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை சுமார் 2000 கி.மீ. நீளம் கொண்டதாகும். இந்த எல்லையில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You May Like This...