இந்தியாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைய பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர்களான பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான் மற்றும் ஷாஹின் ஷா அப்ரிடி ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராம் முடக்கம்
அத்தோடு, டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத், வேகப்பந்து வீச்சாளர்களான ஹசன் அலி மற்றும் நசீம் ஷா, பேட்ஸ்மேன் இமாம்-உல்-ஹக் மற்றும் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் ஆகியோரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பாகிஸ்தான் நட்சத்திரங்கள் சோயிப் அக்தர் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோரின் கணக்குகளும் இதில் அடங்கும்.
முன்னதாக 16 பாகிஸ்தானிய யூடியூப் தளங்களுக்கு இந்தியா தடை விதித்ததுடன் பாகிஸ்தானின் பல நடிகர், நடிகைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri