நாளை பொதுத்தேர்தல் இன்று குண்டுவெடிப்பு : பாகிஸ்தானில் பதற்றம்
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில், 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிஷின் மாவட்டத்தில் இன்று (07.02.2024) தேர்தல் வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
பாகிஸ்தானில் நாளை (08.02.2024) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர்
இந்நிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இதனால் பல இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
இதனால் நாளை தேர்தலை அமைதியான முறையில் நடத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |