வெளிநாடொன்றில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவி்க்கையில், போரில் நமது சகோதர சகோதரிகள் தொடர்ந்து உயிரிழக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது எனக் கூறியுள்ளார்.
இனப்படுகொலை
மேலும், இஸ்ரேல் வன்முறையில் எல்லை மீறி செயல்படுவதாகவும், இதுவரை 9,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தான் மட்டுமல்லாமல், மொத்த இஸ்லாமிய உலகமும், குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதையும், ஆயுதமேந்தாத பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதையும் கண்டு சகிக்க முடியாத வேதனையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் இதுவரை இரண்டுமுறை மனிதநேய உதவிகளை காசாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் மூன்றாவது முறை உதவிகளை அனுப்பவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
