தெஹ்ரான் செல்லும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி : பிராந்திய அமைதி தொடர்பில் பேச்சுவார்த்தை
பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் திங்கட்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சிகளின் தொடர்ச்சியாகவே இந்த விஜயம் அமைவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பொருளாதாரத் தடை
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே முரண்பாடுகளைத் தீர்த்து அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகிறது.

இதன் கீழ், அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கை, ஹூதி விவகாரம் மற்றும் பிராந்தியப் பாதுகாப்புச் சூழல்கள் குறித்து ஈரான் தலைவர்களுடன் இராணுவத் தளபதி அசிம் முனீர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.