கடனை பெறுவதற்குப் பாகிஸ்தானும் இலங்கையும் எடுக்கும் முயற்சி
பாகிஸ்தானும் இலங்கையும் தங்களின் நலிவடைந்த பொருளாதாரங்களை உயர்த்துவதற்காக வரி அதிகரிப்பு உட்படத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பிணை எடுப்புக்களைப் பெறுவதற்கு நெருங்கி வருகின்றன.
6.5 பில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் எடுத்துள்ளது.
இந்தநிலையில், உடன்படிக்கையை எந்த நேரத்திலும் எதிர்பார்ப்பதாக பாகிஸ்தானிய வர்த்தக அமைச்சர் சையத் நவீத், வொசிங்டனில் வைத்துத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம்
இந்நிலையில், 2.9 பில்லியன் டொலர் கடன் திட்டத்தைப் பெறுவதற்கு கடன் வழங்குநரான சர்வதேச நாணய நிதியத்தினால் ஒதுக்கப்பட்ட 15 நிபந்தனைப் பணிகளின் பட்டியலை இலங்கை நிறைவு செய்துள்ளது என்று இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கன் தெரிவித்துள்ளார்.
மேலும், பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையை ஸ்திரப்படுத்த சர்வதேச நாணய நிதிகள் முக்கியமானவை, இலங்கையின் கையிருப்பு இந்த ஆண்டின் முதல் பாதியில் அதன் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த போதுமானதாக இல்லை.
பாக்கிஸ்தானின் கையிருப்பு ஒரு மாதத்திற்கும் குறைவான இறக்குமதியை
மேற்கொள்ளும் அளவிற்குக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam