இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் வடமராட்சிக்கு விஜயம்(Video)
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் இன்று (23.11.2022) யாழ். வடமராட்சியிலுள்ள சக்கோட்டை முனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பலத்த பொலிஸ் பாதுகாப்பு
தமது சகாக்கள் சகிதம் வருகைதந்த பாகிஸ்தான் தூதுவருக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பருத்தித்துறை முனை தொடர்பாக கேட்டறிந்து கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கிக்கும், யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (22.11.2022) இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் அவரை வரவேற்றதோடு பொது நூலகத்தின் சிறப்புகள் மற்றும் வரலாற்று ஆவணங்களை காண்பித்தார்.
அத்துடன் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இன்றைய தினம் பொது நூலகத்தின் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
மேலதிக செய்தி-கஜிந்தன்




மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
