ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதல்! 46 பேர் பலி
ஆப்கானிஸ்தான்(Afghanistan) மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் நேற்றிரவு(24) பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 15 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
பலி எண்ணிக்கை
இந்நிலையில், பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகின்ற நிலையில் பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
அதில் பாகிஸ்தானி தலிபான் என்ற கிளர்ச்சி அமைப்பு தங்கள் நாட்டின்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாகவும், இது பயங்கரவாத அமைப்பு என பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த அமைப்பைக் குறிவைத்து அவ்வப்போது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருகிறது.
பதற்றமான சூழ்நிலை
இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |