பாகிஸ்தானில் இன்று ஆரம்பமாகும் முத்தரப்பு கிரிக்கெட்
பாகிஸ்தானின் 20க்கு20 முத்தரப்பு தொடர் 2025 இன்று(18) ராவல்பிண்டியில் ஆரம்பமாகிறது.
மூன்று அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் ஆரம்ப ஆட்டத்தில் பாகிஸ்தான் ஸிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான்-ஸிம்பாப்வே
ஆண்களுக்கான உலகக் கிண்ண 20க்கு 20 போட்டிகளுக்கு இன்னும் இரண்டரை மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த முத்தரப்புப் போட்டிகள் இடம்பெறுகின்றன. 2025 நவம்பர் 29 அன்று இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது.

அட்டவணையின்படி, நவம்பர் 18 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பாகிஸ்தான்-ஸிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
நவம்பர் 20 மற்றும் 25 ஆகிய திகதிகளில் இலங்கை-ஸிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
நவம்பர் 22 மற்றும் 27 ஆகிய திகதிகளில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
பாகிஸ்தான் அணிக்கு சல்மான் அலி ஆகா தலைமை தாங்குகிறார், தசுன் சானக தலைமையில் அனுபவம் வாய்ந்த ஒரு அணியுடன் இலங்கை அணி களம் இறங்குகிறது. சிக்கந்தர் ராசா தலைமையிலான ஸிம்பாப்வே அணி இந்தப்போட்டிகளில் பங்கேற்கிறது.