மீண்டும் ராஜஸ்தான் அணியில் குமார் சங்ககார! இணையத்தில் பேசுபொருளான காணொளி..
இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்ககார மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2021 இல் ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய சங்ககரா வழிநடத்தலில் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ்
இருப்பினும் 2024 உலகக்கோப்பை வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சயாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார்.
𝑯𝒆𝒂𝒅 𝑪𝒐𝒂𝒄𝒉 𝒌𝒂 𝑯𝒖𝒌𝒖𝒎 🔥 pic.twitter.com/VDiZ3pLswD
— Rajasthan Royals (@rajasthanroyals) November 17, 2025
ஆனால் அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவி விலகினார். இதனால் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வழிநடத்த மீண்டும் குமார் சங்ககாரவையே தலைமை பயிற்சியாளராக ராஜஸ்தான் ரோயல்ஸ் நியமித்துள்ளது.
தலைமை பயிற்சியாளராக சங்ககார நியமிக்கப்பட்டதற்கு சிறப்பு ஏஐ காணொளியை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி மாஸாக நடந்து காட்சியை ஏஐ மூலமாக சங்ககார நடந்து வருவது போல வடிவமைத்துள்ளனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.