4 அணிகளுக்காக விளையாடியும் சிஎஸ்கே ரசிகர்களின் மனதிலேயே இடம்பிடித்தார் ஜடேஜா..
2026ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக்கிற்காக மினி ஏலம் அடுத்த மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்,வீரர்கள் தொடர்பில் பல வதந்திகள் வெளியாகியிருந்தன.
அதிலும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவை கொடுத்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிவீரர் சஞ்சு சாம்சனை வாங்க உள்ளதாக வெளியான தகவலானது சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பல்வேறு தரப்பினரும் பலதரப்பட்ட விமர்சனங்களை முன்வைத்திருந்துாலும் சென்னை அணியினரிடமிருந்து எந்தவொரு தகவலும் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
இந்தநிலையில், பெயர்பட்டியல் சமர்ப்பிக்க வேண்டிய இறுதிநாளான இன்று( 15) சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, சென்னை சூப்பர்கிங்ஸ் அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சேம் கரண் ஆகியோரை கொடுத்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிவீரர் சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளதாக வந்த அறிவிப்பானது இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் பல நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளது, ஆனால் ஒரு சிலரே ரவீந்திர ஜடேஜாவைப் போலவே போட்டியின் அடையாளத்தை வடிவமைத்துள்ளனர் எனலாம்.
ஜடேஜாவின் ஐபிஎல் பயணம்
ராஜஸ்தான் ரோயல்ஸின் நீல நிறத்தில் இளம், துடிப்பான சகலத்துறைஆட்டகாரராக இருந்து சென்னை சூப்பர் கிங்ஸின் மஞ்சள் நிறத்தில் அனுபவம் வாய்ந்தவரான போட்டியின் வெற்றியாளராக , இப்போது வர்த்தகத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸுக்குத் திரும்பும் ஜடேஜாவின் ஐபிஎல் பயணம் சாதாரணமானது அல்ல.

ரவீந்திர ஜடேஜா 2008 ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஷேன் வார்னின் தலைமையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (ஆர்ஆர்) உடன் தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
தனது ஆரம்ப பருவங்களில், ஜடேஜா ஒரு நம்பிக்கைக்குரிய சகலத்துறைஆட்டகாரராக உருவெடுத்தார். இடது கை சுழல்வீச்சு, துடிப்பான களத்தடுப்பு, ஆட்டத்தை முடித்து வைக்கும் திறன் என்பன இவரை திரும்பி பார்க்க வைத்தது.
ஆர்ஆர் அவருக்கு முதல் தளத்தை அளித்தது, மேலும் அவர் பிரகாசிப்பதை ஜடேஜா உறுதி செய்தார். அதனைதொடரந்து, சென்னை சூப்பர் கிங்ஸில் (சிஎஸ்கே) இணைந்த பிறகு ஜடேஜாவின் வாழ்க்கை உச்சத்தை எட்டியது.
சிஎஸ்கேவில் ஜடேஜா
சிஎஸ்கேவுடன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, அவர் ஒரு இளம் திறமைசாலியிலிருந்து லீக்கின் மிகவும் மதிப்புமிக்க போட்டியின் வெற்றியாளராக ஒருவராக உருவெடுத்தார்.
2012 இல் சி.எஸ்.கே-வுடன் இணைந்ததிலிருந்து ஜடேஜா அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறார். சி.எஸ்.கே இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகள் தவிர, ஜடேஜாவும் 10 ஆண்டுக்கு மேலாக அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். அவர்களின் ஐந்து ஐ.பி.எல் பட்டங்களில் மூன்றை வெல்ல பெரும் பங்களித்துள்ளார்.

அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்குப் பிறகு சி.எஸ்.கே-வின் இரண்டாவது தேர்வு வீரராக 2025 மெகா ஏலத்திற்கு முன்பு அவர் ரூ.18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.
அவர் 254 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய 143 விக்கெட்டுகளை வீழ்த்தி சி.எஸ்கேவின் முன்னணி விக்கெட் வீழ்த்தியவராக உள்ளார். மேலும் சிஎஸ்கேவிற்காக அதிகளவான ஆட்டநாயகன் விருதுகளையும் வாங்கியுள்ளார்.
2022 சீசனில் ஜடேஜா சி.எஸ்.கே அணித்தலைவராக நியமிக்கப்பட்டார், ஆனால் அவர் பாதியிலேயே நீக்கப்பட்டு தலைமைத்துவம் தோனியிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. அதனைதொடர்ந்து 2023 ஐபிலை சென்னை இரசிகர்கள் மட்டுமன்றி ஐபிஎல் இரசிகர்கள் யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.
இறுதி 2 பந்துகளில் பௌண்டரி மற்றும் சிக்ஸ் அடித்து சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பங்களித்தார்.
அந்த போட்டி எந்த சிஎஸ்கே இரசிகர்களின் வாழ்வில் மறக்க முடியாத போட்டியாக மாறியதுடன் அனைத்து இரசிகர்கள் மனதிலும் ஜடேஜா இடம் பிடித்தார்.

ஜடேஜா சிஎஸ்கே அணிக்காக 141 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளதுடன் 3,257 ஓட்டங்கள் மற்றும் அவரது சராசரி ஓட்டங்கள் 28.08 ஆகும், மற்றும் ஸ்ட்ரைக் ரேட் (strike rate) சுமார் 130.49 என்று காட்டப்பட்டுள்ளது. எம்எஸ் தோனியுடனான அவரது கூட்டணி அணியின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
டோனி முக்கியமான தருணங்களில் அவரை நம்பினார்.
மனம் உடைந்த இரசிகர்கள்
"ஜடேஜா இல்லாமல் ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே முழுமையடையாது என்று இரசிகர்கள் கூறுவதுண்டு.
வர்த்தகம் தொடர்பான பல வதந்திகள் வெளியான போதும், தோனி எவ்வாறு சிஎஸ்கேவிற்கு முக்கியமோ அதுபோலதான் ஜடேஜா அவரை விடுவிக்க மாட்டார்கள் என்று சிஎஸ்கே இரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்தார்கள். சிஎஸ்கே தொடர்பில் ஒருமுறை நேர்காணலொன்றில் கேள்வி கேட்ட போது குடும்பம் என்று ஜடேஜா பதிலளித்தார்.
இந்தநிலையில் இவ்வாறான அறிவிப்பு மஞ்சள் இரசிகர்களின் மனதை உடைத்துள்ளது எனலாம். ஜடேஜாவை மற்றொரு ஜெர்ஸியில் எவ்வாறு பார்ப்பது என்று இரசிகர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

சிஎஸ்கே அணியின் எதிர்காலத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அவரின் பரஸ்பர பேச்சுவார்த்தைக்கு பிறகே எடுக்கப்பட்டது என்று நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஜடேஜாவுக்கு ரோயல்ஸ் அணியின் தலைவர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிக்கெட் விளையாட்டையும் தாண்டி உணர்வுகளுடன் ஐக்கியமான ஒன்றாகும், எனவே இந்த அறிவிப்பு சிஎஸ்கே இரசிகர்களை சோகத்தில் ஆழத்தியுள்ளது.
2012இல் 19 வயதில் ராஜஸ்தான் அணியில் தொடங்கிய சிஎஸ்கே நாயகனின் பயணம், மீண்டும் ராஜஸ்தான் அணிக்கே அவரை அழைத்து சென்றுள்ளது.
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri