மதீஷ பதிரன தொடர்பில் சிஎஸ்கே நிர்வாகம் எடுத்துள்ள முடிவு..!
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரனவை விடுவிக்க சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
2026 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்திற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பிலும் விடுவிப்பது தொடர்பிலும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு அவர் 13 கோடி ரூபாய்க்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.
நிர்வாக முடிவு
2022ஆம் ஆண்டிலிருந்து சென்னை அணிக்காக விளையாடி வரும் மதீஷ பதிரன, இதுவரை அணிக்காக 32 போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், மதீஷ பதிரன, நியூசிலாந்து வீரர்களான டெவோன் கொன்வே மற்றும் ரச்சின் ரவீந்திர உட்பட பல வீரர்களை விடுவிக்க சென்னை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam