கிளிநொச்சியில் இன்று முதல் நெல் கொள்வனவு
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனினால் இன்று(15.07.2026) முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக சிறுபோக நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த அறிவித்ததன் படி தற்சமயம் அதிக நெல் அறுவடை இடம்பெறும் பிரதேசங்களை அண்மித்து நெற் களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நெல் சந்தைப்படுத்தல் சபை
அந்த வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ நாட்டு நெல் 120 ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா நெல் 130 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல் 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தினுடைய நெல் கொள்வனவு இன்று (15.07.2026) பகல் 10.30 மணிக்கு கிளிநொச்சி பன்னங்கண்டி களஞ்சிய சாலையில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாயிகளிடம் இருந்தும் தலா 2500 கிலோ நெல்லை கொள்ளுதல் செய்யும் வகையில் அதற்கான படிவங்களை வழங்கியுள்ளதுடன் மாவட்டத்தில் இரண்டாயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan