புதுக்குடியிருப்பு நெல் களஞ்சியசாலையில் நெல் கொள்வனவு பணி ஆரம்பம்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோம்பாவில் நெல் களஞ்சியசாலையில் நெல் கொள்வனவு பணி ஆரம்பமாகியுள்ளது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோம்பாவில் நெல் களஞ்சியசாலையில் நெல் கொள்வனவு நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண காரியாலய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கோகிலாதரன் தலைமையில் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லின் தர பரிசோதனை
குறித்த நெல் கொள்வனவின் போது (சம்பா) வெள்ளை, சிவப்பு கிலோகிராம் 125, (நாடு) வெள்ளை, சிவப்பு 120 ரூபாவிற்கும் நெல்லின் தரத்தினை பரிசோதனைக்கு உட்படுத்திய பின் கொள்வனவு செய்யப்படுகின்றது.
குறித்த கொள்வனவானது புதன், வியாழன் ஆகிய நாட்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.














வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா? Manithan

அணு ஆயுதத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா முற்றிலும் தயார்... புடினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
