நெல்லுக்கான புதிய விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரசாங்கம் நிர்ணயித்த உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக இன்று(06.02.2025) முதல் தனது களஞ்சியசாலைகளை திறக்கவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
நெல்லுக்கான உத்தரவாத விலையை விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த நேற்றையதினம் அறிவித்திருந்தார்.
இதற்கமைய, நாட்டு நெல் கிலோ ரூபா 120இற்கும், சம்பா நெல் கிலோ ரூபா 125இற்கும், கீரி சம்பா கிலோ ரூபா 132இற்கும் கொள்முதல் செய்யப்படும் என அவர் கூறியிருந்தார்.
விவசாயிகள் கவலை
தற்போதைய பருவத்துக்கான அறுவடை தொடங்கி சில வாரங்களே கடந்துள்ள நிலையில், தனியார் வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், உத்தரவாத விலைகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் அவை போதியாதாக இல்லை என விவசாயிகள் கவலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |