பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம்(12) உப தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
அத்துடன் சபையால் வழங்கப்படும் விசேட அனுமதி மற்றும் அனுமதி தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அனுமதிகளும் வழங்கப்பட்டது.
மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பயன்படுத்தப்படாத நிலங்களுக்கு 2 வீத வரி அறவிடுவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் அதனை மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவித்து உடனடியாக செயற்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சர்வதேச விசாரணை
வீதி விளக்குகள் திருத்தம் மற்றும் புதிதாக அமைப்பது தொடர்பான கூலி தொடர்பாக வாத பிரதிவாதம் இடம்பெற்றது.
அத்துடன் இறுதியில் திருத்த வேலைக்கு 1000ரூபாவும் மற்றும் புதிதாக அமைப்பதற்கு 1050எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்கு வலுசேர்க்கும் முகமாக செம்மணி விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை கட்டாயம் வேண்டும் என பிரேரணை முன் வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இதனை சபையில் தீர்மானம் எடுக்க முடியாது என தமது கருத்துக்களை முன் வைத்ததுடனும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் என்பவர்கள் செம்மணியில் அவமானப்படுத்தப்பட்டார்கள் என பல எதிர் கருத்துக்களை சபையில் முன் வைத்தனர்.
மாதாந்த அமர்வு
அத்துடன் பல எதிர்ப்புக்களின் மத்தியில் இவ் வலு சேர்க்கும் விடயத்தை 2018ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் இணைப்பது தொடர்பாக சபையில் கலந்துரையாடப்பட்டது.
இன்றைய பிரதேச சபை அமர்வில் 13 உறுப்பினர்களில் 11உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்



