கவிஞர் பா.பிரியங்கனின் அகாலத்தின் குரல்கள் எனும் கவிதைப்புத்தம் வெளியீட்டு விழா
கவிஞர் பா.பிரியங்கனின் அகாலத்தின் குரல்கள் எனும் கவிதைப்புத்தம் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. குறித்த புத்தக வெளியீட்டு விழா நேற்று(9) மாலை 3.30 மணியளவில் சம்பூர் பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
கவிஞர். க. யோகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வின் முதன்மை அழைப்பாளராக கந்தையா பாஸ்கரன் (ஐபிசி ஊடக நிறுவனர்) இ.கிருபைராஜ் (சிரேஸ்ட விரிவுரையாளர்) இ.திருக்குமாரநாதன்(மூத்த வழக்கறிஞர்) தீபச்செல்வன்(எழுத்தாளர்) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
எழுத்தாளரின் கன்னி வெளியீடு
திருக்கோணமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி நோயல் இமானுவல் ஆண்டகை அருள்விருந்தினராக் கலந்துகொண்டு ஆசிவழங்கியிருந்தார்.
போர்க்கால அனுபவங்களையும், வலிகளையும், இழப்புகளையும், தேசத்தின் போக்கையும், அதன்காப்பையும் தனது வீரியமான எழுத்தால் நிறைத்திருந்த எழுத்தாளரின் கன்னி வெளியீடாக இப்புத்தகத்தை தமக்கான சுதந்திர தேசம் ஒன்றை தந்துவிட வேண்டும் என்ற பெருங்கனவுக்காய் தங்கள் உயிர்களை தியாகம் செய்த அத்தனை உறவுகளுக்கும் காணிக்கையாக்கியிருந்தார் கவிஞர்.
முதன்மைவிருந்தினர் தனதுரையில் தனது ஊடகக் குழுமத்தில் பணியாற்றிய ஒரு சிறந்த படைப்பாளி பிரியங்கன் என்பதையும், இவ்வளவு எழுத்தாற்றலும், வலியும் நிறைந்திருக்கும் என்பதை தான் எதிர்பார்க்கவில்லை எனக்கூறியதுடன், தற்கால இளைஞனின் கவிதை வெளியீடு என்பது ஒரு காதல் கவிதை புத்தகமாக அமைந்திருக்கும் என தன் எதிர்பார்ப்பை பிரியங்கனின் எழுத்துப் புரட்டிப்போட்டது எனக்குறிப்பிட்டார்.
போராட்ட வரலாறு
2000 ஆண்டு பிறந்த பிள்ளைகள் தமிழ்தேசியத் சிந்தனையுடன் படைப்புகளை வெளியிடுவது பெருமகிழ்வுக்கு உரியதும், எதிர்காலத்தில் எமது போராட்ட வரலாறும் தியாகங்களும் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும் எனும் நம்பிக்கை திருப்தி அளிப்பதாகும் குறிப்பிட்டார்.
இது ஒப்பற்ற போர்க்கால இலக்கியமாக, வலுவான ஆவணமாகப் பதிவாகின்றது எனவும் கூறியிருந்தார்.
கவிஞர் கொட்டிஆரனின் அறிமுகவுரையும், தமிழ்தேசிய இலக்கியப் பேரவையின் செயலாளர் க. அலெக்ஸன் வெளியீட்டுரையும் காத்திரமானதாக அமைந்திருந்தது.
அ.சத்தியநாதனின் நயவுரை சபையினைக்கட்டிப்போட்டதுடன் நூலின் கனத்தினையும், காலத்தின் தேவையான கருத்துகளைச் சுமந்திருப்பதையும், போர்கால இலக்கியத்தில் ஒரு அசைக்கமுடியாத இடத்தை பிரியங்கனின் அகாலத்தின் குரல் பெற்றுள்ளது எனவும் நயந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |















இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 16 மணி நேரம் முன்

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
