இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது - பொ. ஐங்கரநேசன்!

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka National People's Power - NPP NPP Government
By Kajinthan Jul 28, 2025 01:18 PM GMT
Report

ஆடிக்கலவர நாளில் சகோதர தினத்தை முன்னெடுத்துள்ள ஜே.வி.பி அரசாங்கம் விரைவில் இலங்கையர் தினத்தைக் கொண்டாடவுள்ளது. ஆனால், இந்தத் தினங்களைக் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜுலை நினைவுக் கருத்தரங்கு நேற்று (27.07.2025) யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "நினைவேந்தல்கள் வரலாற்றை நினைவுபடுத்துகின்றன. வரலாறு ஒருவரை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றதோ அங்கிருந்துதான் அவர் தனது அடுத்த பயணத்தைத் தொடரமுடியும். நதிகளைப் போன்றே வரலாறும் பின்னோக்கிப் பாய்வதில்லை. இதுவே வரலாற்றின் நியதி.

முள்ளிவாய்க்கால் பேரழிவு

வரலாறு தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டு வந்து நிறுத்தியது. ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட அந்த இடத்தில் இருந்துதான் அஞ்சலோட்டம் போன்று அடுத்த போராட்டத்தைத் தமிழ் மக்கள் ஜனநாயக வழியில் முன்னெடுத்திருக்க வேண்டும்.

இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது - பொ. ஐங்கரநேசன்! | P Aingaraneshan Blames Npp Government

முள்ளிவாய்க்கால் பேரழிவு சர்வதேச நாடுகளை எமது போராட்டத்தின் நியாயப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான சாத்தியங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது.

ஆனால், அதைச் செய்யத் தவறிய எமது தலைவர்கள், மாறாக இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பிணை எடுத்துக்கொடுத்தார்கள்.

வரலாறு இன்னுமொரு சந்தர்ப்பமாகச் செம்மணியில் மனிதப் புதைகுழிகளை அடையாளப்படுத்தியுள்ளது. போரின் சாட்சிகளாக, இன அழிப்பின் சாட்சிகளாக எம்முன்னால் பலர் இன்றும் உள்ளார்கள்.

இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது - பொ. ஐங்கரநேசன்! | P Aingaraneshan Blames Npp Government

இவர்களால் உயிர்ப்பயம் காரணமாக உண்மைகளை அதிகம் வெளிப்படுத்த முடியாது. உயிருள்ள சாட்சியங்களைவிட வலுவான சாட்சியங்களாக இன்று எம்முன்னே செம்மணி மனிதப்புதைகுழிகளும் அவற்றில் இருந்து வெளிப்படும் எமது உறவுகளின் எலும்புக்கூடுகளும் உள்ளன.

எலும்புக்கூடுகள் தனது கழுத்தை இறுக்கப் போகின்றது என்று அஞ்சும் பேரினவாதம் இதனைத் திசை திருப்புவதற்கான சகல எத்தனங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழிகள் தந்துள்ள அரியவாய்ப்பை எமது தலைவர்கள் சரியாகப் பயன்படுத்தி நீதிக்கான, விடுதலைக்கான எமது பயணத்தை வேகமாகத் தொடர முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US